New year offer 2017

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது எம்.சி.சி. தொடர்பான இறுதி அறிக்கை

06/25/2020

மிலேனியம் சேலன்ச் கோர்பரேஷன் எனும் எம். சி. சி ஒப்பந்தம் தொடர்பில் முழுமையான மீளாய்வுசெய்யப்பட்ட இறுதி அறிக்கையினை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் இன்று  கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்து அறிக்கையானது நேற்றையதினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

எம்.  சி. சி  ஒப்பந்தம் தொடர்பில் ஆராய்வதற்கு  நியமித்த குழுவினர் ஒப்பந்தம் தொடர்பில் கடந்த  ஆறு  மாத காலமாக  பல்வேறு துறைகளை அடிப்படையாகக்  கொண்டு முன்னெடுத்த ஆய்வு மற்றும் தரவுகளின் அடிப்பபடையில் அறிக்கையினை  தயார்படுத்தியுள்ளனர். 

இந்நிலையில், முழுமையான அறிக்கை  இன்று  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.