New year offer 2017

இலங்கை செய்திகள்

கொழும்பில் 18 மணிநேர நீர் வெட்டு

06/25/2020

கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. 

சனிக்கிழமை (27.06.2020)  இரவு 10 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (28.06.2020) பிற்பகல் 4 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, கொழும்பு 1, 11 மற்றும் 12 ஆகிய பகுதியில் குறைந்த அழுத்தத்துடன்  நீர்  விநியோகிக்கப்படும்.

அவசர திருத்துவேலை காரணமாகவே நீர் வெட்டு அமுல்படுத்தப்படுவதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.