New year offer 2017

இலங்கை செய்திகள்

ஜனகன் - மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்க புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ளேன்

06/26/2020

மொரட்டுவ , வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் காரியாலயம் அமைத்து அதனுடாக மக்களுக்கு சேவையாற்ற எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியிக் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனகன் விநாயகமூர்த்தி, மக்களின் பிரச்சினைகளை தெரிப்பிதற்காக செயலி ஒன்றை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

வெள்ளவத்தையில் அமைந்துள்ள ஐ.டி.எம். நேசன்ஸ் கெம்பஸ் நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

கொழும்பு மாவட்ட பிரதிநிதியாக தாம் தெரிவுச் செய்யப்பட்டால் மக்கள் அவர்களது பிரச்சினைகளை மொரட்டுவ , வெள்ளவத்தை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் எனது தலைமையில் நிறுவப்படும் காரியலங்களில் தெரிவிக்க முடியும். இதன்போது குறித்த காரியாலயங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நிர்வாகக்குழுவும் சேவையில் ஈடுப்படுத்தப்படுவர் . இதற்போது மக்களது பிரச்சினைகளை அவர்களே தீர்த்து வைப்பர். பாராளுமன்றத்திற்காக ஒருவரை தெரிவுச் செய்து அனுப்பிவைக்கும் மக்களுக்க அந்த பிரதிநிதிகளை சந்திப்பதில் பெரும் சிக்கல் நிலைமை ஏற்படும்.இதனை தவிர்க்கும் முகமாகவே இந்த காரியாலயங்களை செயற்படுத்த தீர்மானித்துள்ளேன்.

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலமான ஆரம்பகல்வி மற்றும் பாலர் பாடசாலைகளை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க எதிர்பார்த்திருக்கேன். கொழும்புவாழ் தமிழ் மக்களின் பிள்ளைகள் தங்களது ஆரம்பக்கல்வியை தமிழ்மொழி மூலம் கற்க விரும்பினாலும் , அதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாக இருக்கின்றது. அதனால் இந்த பாடசாலைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளேன். இதேவேளை கொழும்பில் தொழிற்கல்வி நிலையங்கள் பல இருந்தாலும், கொழும்புவாழ் இளம் தலைமுறையினர் அதனை முழுமையாக பயன்படுத்துவதில்லை. இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த இளம்தலைமுறையினர் தொழிற் கல்வியை பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் எதிர்பார்த்திருக்கின்றேன்.

தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்களின் வீட்டுரிமைப்பத்திரங்களை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட விடயஙகள் தொடர்பில், கவனம் செலுத்த எதிர்பார்த்திருக்கின்றேன். மேலும், மக்கள் தங்களின் பிரச்சினைகளை தெரிவிப்பதற்காக இணையத்தினூடாக செயலி ஒன்றையும் செயற்படுத்த எதிர்பார்த்திருக்கின்றேன். இந்த செயலியில் மக்கள் தங்களின் பிரச்சினைகளை தெரியப்படுத்தலாம். பின்னர் எமது குழுவினர் அதனை தீர்த்து வைப்பர். இவற்றுக்கௌ;ளாம் நிதி எவ்வாறு கிடைக்கப் பெறும் என்று நீங்கள் என்னலாம். அதற்கான நிதிகளை பல்வேறு அமைப்புகளின் ஊடாக எம்மால் திரட்டிக் கொள்ளமுடியும்.

கேள்வி: கொழும்பு மாவட்டத்தில் சிதரிக்கிடக்கும் கலைஞர்கள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: இலங்கையை பொருத்தமட்டில் கலைஞர்கள் என்ற குழுவினர் கலைத்துறை தொடர்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும் , அந்த கலைத்துறையை வர்த்தகமாக்குவதற்கான தேர்ச்சியை பெற்றில்லை. அதனால் கலைத்துறையை எவ்வாறு வர்த்தகமாக்குவது என்பது தொடர்பில் அவர்களுக்கு பயிற்சி பெற்றுக்கொடுக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் கலைகஞர்கள் எவ்வாறு அவர்களின் கலைத்திறனை வர்த்தகமாக்க முடியும் என்பது தொடர்பான பாடநெறிகள் காணப்படுகின்றன. ஆனால் இலங்கையில் அவ்வாறு இல்லை. அதனால் கலையை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது தொடர்பான கற்கைநெறியை முன்னெடுக்க வேண்டும். அதற்கான திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதே எனது நோக்கம்.

கேள்வி : தாங்கள் இந்துக் கல்லூரி மாணவன் என்று அடிக்கடி கூறிவருவதற்கான காரணம் என்ன ?

பதில்: இந்துக்கல்லூரியில் கல்விக் கற்றவன் என்ற காரணத்தினாலே நான் அதனை தெரிவிக்கின்றேனர். இந்துக் கல்லூரி மாணவன் என்று கூறிக் கொள்வதில் எனக்கு பெருமை அதுதான் அவ்வாறு தெரிவித்து வருகின்றேன். அது நான் அரசியல் வாதியாகவோ , வர்த்தகராகவோ, ஒரு நிறுவனத்தின் உரிமையாளராகவோ அல்லது அடிமட்டத்தில் இருக்கும் ஒரு நபராகவோ இருந்தாலும் கூட , நான் இந்துக்கல்லூரி மாணவன் என்றும் கூறிக் கொள்வதில் எனக்கு பெருமையே அதனாலேயே தெரிவித்திருக்கின்றேன். இதுவும் அரசியல் இலாபம் கருதிய பேச்சு என்றால் அவர்களுக்கு என்னால் பதிலளிக்க முடியாது.