New year offer 2017

இலங்கை செய்திகள்

171 இலங்கையர்கள் லெபனானில் இருந்து வருகை

06/26/2020

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலக நாடுகளில் சிக்கித்தவிக்கும் இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

இந்நிலையில் லெபனானில் இருந்து 171 இலங்கையர்களை அழைத்து வந்த ஸ்ரீலஙகன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் இன்று அதிகாலை 5.41 மணியளவில் கட்டநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்கள் மீது விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.