New year offer 2017

இலங்கை செய்திகள்

உத்தேசிக்கப்பட்ட 480 மில்லியன் அமெரிக்க டொலர் குறித்து அமெரிக்க தூதரகத்தின் அறிவிப்பு - எம்.சி.சி.திட்டம்

06/26/2020

மில்லியனியம் செலேஞ்ச் கார்பரேசன் (எம். சி.  சி)  திட்டத்தின் கீழ் 480 மில்லியன் அமெரிக்க  டொலர் நிதியை இலங்கை அரசிடம் கையளிக்கவோ, செலவழிக்கவோ இல்லை என  இலங்கைக்கான அமெரிக்க தூததரகம் தெரிவித்துள்ளது.

எம். சி. சி  ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்த மீளாய்வு குழுவினர் ஒப்பந்தம் தொடர்பான ஆய்வு அறிக்கையினை  நேற்றைய தினம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்கள்.

ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள  விடயங்கள் அனைத்தையும் எவ்வித   ஒழிவு  மறைவுமின்றி மக்களுக்கு தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி  அதிகாரிகளுக்கு பணிப்புரை  விடுத்துள்ளார்.

இந்நிலையில் எம். சி.  சி. ஒப்பந்தத்தின் முதல் இரண்டு கட்டங்கள் கடந்த  2017 மற்றும்  2018 ஆம் ஆண்டுகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

இதற்கு   முதல் கட்டமாக 7.4 மில்லியன் அமெரிக்க டொலரும்,  இரண்டாவதாக  2.6 மில்லின்  அமெரிக்க டொலரும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டன.

ஆனால்    கிடைக்கப்பெற்ற  நிதி குறித்த எவ்விதமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படவில்லை என ஆய்வுக் குழு குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்தே அமெரிக்க தூததரகம் 480 மில்லியன்   அமெரிக்க  டொலர் நிதியை இலங்கை அரசிடம் கையளிக்கவோ, செலவழிக்கவோ இல்லை என  இலங்கைக்கான அமெரிக்க தூததரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.