New year offer 2017

இலங்கை செய்திகள்

வியாழேந்திரன் சாடல் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு மொத்த வியாபாரிகள்

06/27/2020

தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை ஒட்டு மொத்தமாக சேர்த்து அந்தவாக்கில் வெற்றிபெற்று அந்த ஒட்டுமொத்த வாக்குகளை கொண்டு தனிப்பட்ட சலுகைகளுக்காக கடந்த அரசாங்கத்திடம் விற்ற மொத்தமாக வியாபாரிகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்த மக்களுக்கு தீர்வுமில்லை அபிவிருதியுமில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன வேட்பாளருமான  சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு கண்ணி அம்மன் ஆலைய வீதியிலுள்ள அவரது தலைமைக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (25)  இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த தொல்பொருள் சம்பந்தமாக ஜனாதிபதி செயலணி தெடர்பாக இப்பொழுது  கோமா நிலையில் இருந்தவர்களும்  வேற்றுகிரகத்தில் இருந்தவர்களும் நித்திரை மயக்கத்தில் இருந்தவர்களும் தற்போது வேற்று கிரகத்திலிருந்து பூமிக்கு வந்து கொண்டு கோமாவில் இருந்து விழித்துக் கொண்டு தொல்பொருள் சம்பந்தமான கருத்துக்களை வெளியிடுவதை பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக இருக்கின்றது. 

ஏன் என்றால் இந்த தொல்பொருள் செயலணி என்பது இப்போது வந்த புதிதான விடயமல்ல ஏற்கனவே முன்னேயே ஜக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திலும் இந்த தொல்பொருள் இருந்தது. வடக்கிலே கிழக்கிலே பல இடங்கள் அடையாளபடுத்தப்பட்டன கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால் மட்டக்களப்பிலே வேப்பவெட்டுவான் முருகன் ஆலயத்தில் தொல்பொருள்  அடையாளப்படுத்தப்பட்டது.

இவ்வாறு பல இடங்கள் அடையாளப் படுத்தப்பட்டுள்ளன அப்போது எல்லாம் நாங்கள் குரல் கொடுத்தோம் போராடினோம் அப்போதெல்லாம் வாய் திறக்காதவர்கள். உதாரணம் சம்மந்தன் ஐயா அவர்கள் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு என்னையும் சேர்த்து 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வைத்து அரசாங்கத்தினுடைய இருப்பை தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த வேளையில் திருக்கோணேஸ்வரம் தொல் பொருளுக்குப் போனதே அப்போதெல்லாம் எந்த அரசியல்வாதிகளும் போராடவில்லை வாய்களை திறக்கவில்லை தொல்பொருள் செயலணி தேர்தல் காலத்துக்குள் வந்ததால் இவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாறி விட்டது.

எமது மாகாணத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட தொல்பொருள் துறை சார்ந்த இவர்களையும் உள்வாங்க வேண்டும். எமது தமிழ் மக்களுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, சமயம், அம்சங்களை பாதிக்கின்ற வகையிலே இந்த தொல்பொருள் செயலணி அமையக்கூடாது என உத்தரவாதம் தரவேண்டும் என கட்சி கூட்டத்தில் பிரதமரிடம்  இது குறித்து பேசி  கலந்தாலோசித்து இருந்தோம் அவர் நிச்சயமாக ஒரு நடவடிக்கையும் இடம்பெற மாட்டாது என உத்தரவாதம் கிடைத்துள்ளது. 

கடந்த காலத்திலே ரணில் விக்ரமசிங்கவோடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் ஒரு குடும்பமாக செயல்பட்டனர். எதிர்க் கட்சியில் இருந்தாலும் ஒவ்வொரு வரவு செலவு திட்டங்களுக்கு, பிரதமர் இல்லாத நம்பிக்கை தீர்மானங்களுக்கு, பிரதமரை காப்பாற்றுவதற்காக ரணில் விக்ரமசிங்காவின்  அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக கைகளை உயர்த்தி இருந்தார்கள் அதனால் இந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

வடக்கு கிழக்கிலே 1000 விகாரைகள் என்ற வரவுசெலவுத் திட்டங்களுக்கும் கரங்களில் இயற்றி ஆதரவு அளித்தார்கள் ஆனால் அந்த அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்கு உரிமையும் பெற்றுக் கொடுக்கவில்லை தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை அபிவிருத்தியையும் பெற்றுக் கொடுக்கவில்லை அந்த அரசாங்கத்தோடு இணைந்து எதையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கவில்லை ஆனால் அந்த ஐக்கிய தேசியகட்சியில் அரசாங்கத்திலிருந்து தங்களுக்குத் தேவையான அனைத்து சலுகைகளும் பெற்றுக்கொண்டார்கள்.

நாங்கள் சலுகை விலை போக மாட்டோம் நாங்கள் கொள்கை வாதிகள் என்று சொல்லிக்கொண்டு அரசாங்கத்திலிருந்து ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஒரு எதிர்க்கட்சி தலைவருக்கு கிடைக்கக்கூடிய அத்தனை சலுகைகளையும் பெற்றார்கள் அனுபவித்தார்கள் வாகன பெர்மிட் கொடுக்கப்படுகின்றது அரசாங்க சம்பளம் கொடுக்கப்படுகின்றது அரசாங்கத்தினால் பாதுகாப்புக்கு போலீஸ் வழங்கப்படுகின்றது தனிப்பட்ட ரீதியாக வீடு மூன்று நேரம் கூட பாராளுமன்ற சிற்றுண்டி சாலையிலே நல்ல உணவுகள்  இவர்கள் செய்ய வேண்டிய ஒரே வேலை  அரசாங்கத்தின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்துக்கொண்டு வாரத்துக்கு ஒரு அறிக்கை விட்டால் போதும். 

இதனையும் சிலபேர் நம்புகின்றார்கள் ஏமாற்றுகின்ற அவர்களும் இருக்கின்றார்கள் ஆனால் நம் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் தேர்தலுக்காக திட்டமிட்டு நடத்தப்படுகின்ற ஒரு நாடகம் இதுதான் கடந்த காலங்களிலும் நடந்து வருகின்றது இந்த இலங்கையிலே வடக்கு கிழக்கிலே பாதிக்கப்பட்டு அழிக்கப்பட்டு போகின்ற சமூகமாக ஏன் இன்னொரு சமூகத்துடன் கூட கையேந்தி நிற்கும் சமூகமாக தமிழ் சமூகம் மாறிக் கொண்டிருக்கிற நிலைமையை யாரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது.

சம்பந்தன் ஐயாவிற்க்கு அனைத்து சலுகைகளும் கிடைக்குது ஆனால் மக்களுக்கு உரிமையும் இல்லை தீர்வும் இல்லை, அபிவிருத்தியும் இல்லை ஒன்றுமே கிடையாது ஆகவே எமது மக்கள் தெளிவாக இருக்கின்றார்கள் முகமூடி அணிந்து விட்டு பின் கதவால் போய் தங்களுக்கு தேவையான சலுகைகளை அனுபவிப்பதோடு அதை விட்டுவிட்டு முகமூடியை கழட்டிவிட்டு முன் கதவால் போய் விடயங்களை பெற்றுக் கொடுக்கலாம.

அரசாங்கத்துடன் இணைந்து மக்களுக்கு தேவையான உடனடி தேவையோ அல்லது நிரந்தர தீர்வுக்கான பயணத்தை முன்னெடுப்பது அல்லது அபிவிருத்தியை பெற்றுக் கொடுப்பது முன் கதவால் செய்வது வெளிப்படையாக செய்வது நல்லது என நான் நினைக்கின்றேன் இதனால் என்ன விமர்சனங்கள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள தயார் என தெரிவித்தார். 

TAGS