New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

06/28/2020

இலங்கையில் இன்றையதினம் வெள்ளிக்கிழமை மேலும் 22 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,661 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,033 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 383 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் 42 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தின் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.