New year offer 2017

இலங்கை செய்திகள்

முகக்கவசம் அணியாது நடமாடியோருக்கு ஏற்பட்ட நிலை

06/30/2020

நாட்டில் நேற்றைய தினம் திங்கட் கிழமை பொது இடங்களில் 1,441 நபர்கள் முகக்கவசம் அணியாது நடமாடிய நிலையில் அவர்களை அடையாளம் படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு முகக்கவசம் அணியாது நடமாடியதாக அடையாளப்படுத்தப்பட்ட 1,441 பேரும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், முகக்கவசம் அணியாது பொது இடங்களில் நடமாடுபவர்களை தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய 14 நாட்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப்பிரிவு ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.