New year offer 2017

இலங்கை செய்திகள்

தபால் மூல வாக்காளர்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் பொதியிடும் பணி ஆரம்பம்

06/30/2020

நடைபெறவுள்ள பாரளுமன்ற தேர்தலுக்காக தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்கு சீட்டுக்கள் மற்றும் ஏணைய ஆவணங்களை பொதியிடும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட அஞ்சல் வாக்காளர்களுக்கான வாக்குசீட்டு பொதியிடும் பணி இன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் காலை ஆரம்பமாகியது. யாழ்மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கீ.அமல்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்  போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த பணிகள் நளை(1) வரை இடம்பெறவுள்ளது.  யாழ்மாவட்டத்தில் 21,239 அஞ்சல் வாக்காளர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு பொதியிடும் பணி நடைபெற்று வருகின்றது.

அதே போல் கிளிநொச்சி மாவட்டத்தில் 3,590 ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்காளர்களுக்கான பொதியிடும் பணிகள் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது. யாழ் மாவட்;த்தினை பொறுத்தவரை 22 நிலையங்களில் பொதியிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு பொதியிடப்பட்ட ஆவணங்கள் நாளை(1) முதல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு கிடைக்கபெறும். எனவே நாளை முதல் கிடைக்கபெறும் பொதிகள் தொடர்பாக மேலதிக நடவடிக்கையினை மேற்கொள்வார்கள்.

எதிர்வரும் ஜீலை மாதம் 13ம் திகதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கான வாக்களிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 14,15ம் திகதிகளில் ஏணைய அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு இடம்பெறும்.16,17ம் திகதிகளில் மாவட்ட செயலகம் முப்படையினர் பொலிஸாருக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும்.

மேலும் யாழ்ப்பாண மாவடடத்தினை பொறுத்தவரையில் இதுவரையில் 22 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பயிறுள்ளன.அத்துடன் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரச்ச்சாரத்தின் போது வேட்ப்பாளர்கள் அனுமதி எடுத்து நடாத்துகின்ற தேர்தல் பரப்புரை கூடடம் மற்றும் வேட்ப்பாளர் பயணிக்கும் வாகனத்தில் மட்டுமே படங்களை காடசிப் படுத்த முடியும் மாறாக வேறு இடங்களில் படங்களை காட்ச்சிப்படுத்த முரராக தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.