New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

07/01/2020

இலங்கையில் இன்றையதினம் புதன்கிழமை மேலும் 37 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவர்களில், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை மற்றும்  தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்து தலா 11 பேரும், 8 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 4 பேர் அங்கொடை தொற்று நோய் வைத்தியசாலையிலிருந்தும்,2 பேர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்தும், ஒருவர் மினுவாங்கொடை  வைத்தரியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,748 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 288  பேர் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் உயிரிழந்துள்ளனர்.