New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை இலங்கையில் அதிகரிப்பு

07/02/2020

நாட்டில், மேலும் 06 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 6 பேரில், பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேருக்கும்,ஐக்கிய இராச்சியம் மற்றும் டுபாயிலிருந்து நாடு திரும்பியவர்களில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,053 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,748 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளில் 294 பேர் தொடர்ந்தும் நாடு முழுவதும் உள்ள 11 வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 55 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது