New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் குணமடைவு!

09/15/2020

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

வெலிகந்த ஆதார வைத்தியசாலையிலிருந்து 6 பேரும், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையிலிருந்து 3 பேரும், இரனவில வைத்தியசாலையிலிருந்து இருவரும் இவ்வாறு குணமடைந்த நிலையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,016 ஆக உயர்வடைந்துள்ளது.