New year offer 2017

இலங்கை செய்திகள்

67 கொரோனா தொற்றாளர்கள் குணமடைவு

10/29/2020

நாட்டில் இன்றையதினம் மேலும் 67 கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில், 25 பேர் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்தும், 19 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலிருந்தும்,  12 பேர் அங்கொடை தேசிய தொற்று நோய் தடுப்பு வைத்தியசாலையிலிருந்தும், 08 பேர் தெல்தெனிய வைத்தியசாலையிலிருந்தும், 02 பேர் வெலிகந்த வைத்தியசாலையிலிருந்தும், ஒருவர் கல்கமுவ வைத்தியசாலையிலிருந்தும் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,142 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 9,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதில் 5,044 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

அத்துடன் 435 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.