New year offer 2017

இலங்கை செய்திகள்

ஜே.வி.பி. - அனைத்தின மக்களும் புதிதாக சிந்திக்க வேண்டும் ! அழிவுப் பாதையில் செல்லும் புதிய ஆட்சி

01/13/2021

'புதிய' ஆட்சியுடன் கடந்த வருடம் முடிவடைந்து மற்றுமொரு வருடம் பிறந்துள்ளபோதிலும் அந்த 'புதிய' ஆட்சியும் பயணித்துக் கொண்டிருப்பது பழைய அழிவுமிக்க பாதையிலேயே என்பது அவர்களால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு விட்டது.   

அந்த ஆட்சியைக் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்தவர்களின் எதிர்பார்ப்புகள்கூட சிதைக்கப்பட்டுள்ள நிலைமையில் இந்து பக்தர்களான தமிழ் மக்களுக்கும்  ஏனைய இனத்தவர்களைச் சேர்ந்த இலங்கைவாழ் மக்களுக்கும் தாம் இதுவரை எடுத்த தீர்மானங்கள் பற்றி புதிதாக சிந்திப்பதற்கான காலம் பிறந்துள்ளது. 

இவ்வருடத்தின் தைப் பொங்கல் தினத்தினால் எமக்கு வழங்கப்படுகின்ற முக்கியமான செய்தி அதுவே என நாங்கள் நினைக்கிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :

தமிழ் சூரிய பஞ்சாங்கத்திற்கு அமைவாக புது வருடத்தின் தொடக்கமாக  கருதப்படுகின்ற தைப்பொங்கல் தினம் இவ்வருடத்தில் இன்றைய தினம் (14) பிறந்துள்ளது. 

உலகம் பூராவிலும் உள்ள இந்து பக்தர்களான தமிழ் மக்களுடன் ஒன்றுசேர்ந்து இலங்கைவாழ் தமிழ் மக்களும் தமது வாழ்க்கைக்கு, வேலைத்தளத்திற்கு புதிய தொடக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இந்த தினத்தை வைபவரீதியாக கொண்டாடுகிறார்கள்.  

புதிய வருடத்தின் ஆரம்பம் மக்களின் கலாசார வாழ்க்கையில் புதிய எதிர்பார்ப்பு, பிரார்த்தனைகளை மேலோங்கச் செய்விக்கின்ற களமொன்றை அமைத்துத் தருகின்றது.

அத்துடன் அது இதுவரை நிலவிய பழக்கவழக்கங்கள், மனப்பாங்குகளை மிகவும் சாதகமானதாக ஆக்கிக்கொள்ளவும் இற்றைவரை வெற்றிகொள்ள இயலாமல்போன சவால்களை வென்றெடுப்பதற்காகவும் எதிர்பார்ப்புகளை புதுப்பித்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பினை உருவாக்கித் தருகின்றது.  

எவ்வாறாயினும் பொதுவாக இலங்கை மக்களுக்கு போன்றே இந்து பக்தர்களான தமிழ் மக்களுக்கும் இதற்குமுன்னர் மலர்ந்த 'புதிய' வருடங்களிலிருந்து கொண்டுவந்த பழைய பிரச்சினைகளுக்கு மேலதிகமாக புதிய பிரச்சினைகளுடனேயே புது வருடம் பிறக்கின்றது.

குறிப்பாக ஒட்டுமொத்த மக்கள் வாழ்க்கையையும் தலைகீழாக மாற்றிய கொவிட் பெருந்தொற்று இந்த நிலைமையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளதென்பதில் சந்தேகமே கிடையாது. ஆனால்  இந்த சிக்கலான நிலைமைக்குள்  மூழ்கிச்  செல்வதன்றி அத்தகைய நிலைமைகள் தோன்றக் காரணமாக அமைந்த ஏதுக்களை ஆராய்ந்து பார்த்து தீர்வுகளைக் கண்டறிவதே இடம்பெறவேண்டும்.

 அதன்பொருட்டு புதிய சிந்தனையொன்றில் பிரவேசிக்க இந்த தைப்பொங்கல் தினம் பெறுமதிமிக்க களத்தை அமைத்துக்கொடுப்பதோடு பிறக்கின்ற புதிய வருடத்தை வெற்றிகரமான வருடமாக மாற்றிக்கொள்ள அர்ப்பணிப்புடனும் துணிச்சலுடனும் போராடவேண்டி உள்ளது. அந்த வெற்றிக்குத் தடையாக அமைகின்ற சவால்களை சரிவர இனங்கண்டு அவற்றைத் தோல்வியடையச் செய்விப்பதும் அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.  

'புதிய' ஆட்சியுடன் கடந்த வருடம் முடிவடைந்து மற்றுமொரு வருடம் பிறந்துள்ளபோதிலும் அந்த 'புதிய' ஆட்சியும் பயணித்துக் கொண்டிருப்பது பழைய அழிவுமிக்க பாதையிலேயே என்பது அவர்களால் ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டு விட்டது.   

அந்த ஆட்சியைக் கட்டியெழுப்ப பங்களிப்புச் செய்தவர்களின் எதிர்பார்ப்புகள்கூட சிதைக்கப்பட்டுள்ள நிலைமையில் இந்து பக்தர்களான தமிழ் மக்களுக்கும்  ஏனைய இனத்தவர்களைச் சேர்ந்த இலங்கைவாழ் மக்களுக்கும் தாம் இதுவரை எடுத்த தீர்மானங்கள் பற்றி புதிதாக சிந்திப்பதற்கான காலம் பிறந்துள்ளது. இவ்வருடத்தின் தைப் பொங்கல் தினத்தினால் எமக்கு வழங்கப்படுகின்ற மக்கியமான செய்தி அதுவே என நாங்கள் நினைக்கிறோம்.

இந்நிலைமையின்கீழ் பிறந்த புதிய வருடம் தீர்க்கப்படாத சிக்கல்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த மக்களும் இலங்கைத் தேசத்தவர்களாக புதிதாக சிந்தித்து புதிய பயணத்தை மேற்கொள்வது மிகமுக்கியமானதென நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி என்றவகையில் நாங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் அதற்காக வழிகாட்ட எப்போதும் தயாராக இருக்கிறோம்.

2021 இன் தைப்பொங்கல் தினத்தை கொண்டாடுகின்ற இந்து பக்தர்களான தமிழ் மக்கள் அனைவருக்கும்  நல்வாழ்த்துக் கூறுகின்ற நாங்கள், மிகவும் சாதகமான நாளைய தினத்திற்கான எதிர்பார்ப்பினை வெற்றியீட்டச் செய்விப்பதற்காக ஒன்றுசேர்ந்து போராட அழைப்பு விடுக்கிறோம்.