New year offer 2017

இலங்கை செய்திகள்

நாட்டில் மேலும் 309 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம்

01/13/2021

நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப் பகுதியில் மேலும் 309 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கையானது 49,846 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 646 நோயாளர்கள் இன்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 43,267 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 6,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தில் 653 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பல் உள்ளனர்.