New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 769 பேர் குணமடைவு

01/21/2021

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 769 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 47,984 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள 66 வைத்தியசாலை மற்றும் சிகிச்‍சை நிலையங்களில் 6,931 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேநேரத்தில் கொரோனா தொற்று சந்தேகத்தில் 792 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

நேற்று 770 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 55,189 ஆக உயர்ந்துள்ளமையும் குறிப்பிடத்கத்கது.