இலங்கை செய்திகள்
இன்று மீண்டும் திறக்கப்பட்டது மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள்
01/25/2021நீண்ட நாட்களின் பின்னர் மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்கான இன்று திங்பட்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்திரம் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
சுகாதார அமைச்சின் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக சகல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போடப்பட்டு இவ்வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
இந்நிலையில் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் ஏற்கனவே மீள ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் இன்றே திறக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய மேல் மாகாணத்தில் 907 பாடசாலைகள் இன்று மீள திறக்கப்படுள்ளன.
இந்த பாடசாலைகளிலிருந்து 73 ஆயிரத்து 393 மாணவர்கள் இம்முறை சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.