New year offer 2017

இலங்கை செய்திகள்

அமைச்சுக்களின் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதியுயர் விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியீடு

02/18/2021

தேசிய பாதுகாப்பு , அனர்த்த முனாமைத்துவம் மற்றும் உள்விவகார அமைச்சு, காணி அமைச்சு ஆகிய அமைச்சுக்களின் விடயதானங்கள் திருத்தப்பட்டு அதியுயர் விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோத்தபய ராபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் உள்விவகார இராஜாங்க அமைச்சுக்குள் புதிதாக 18 நிறுவனங்களும்,காணி அமைச்சுக்குள் 7 நிறுவனங்களும் புதிதாக விசேட வர்த்தமானி ஊடாக இணைக்கப்பட்டுள்ளன.

பதிவாளர் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம், வானிலை ஆராய்ச்சி மையம்,குடிவரவு,குடியகழ்வு திணைக்களம்,ரக்னா காப்புறுதி லிமிடட்,தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகா சபை,தேசிய கட்டிட நிர்மாணிப்பு  ஆய்வு சபை,இராணுவ சேவை அதிகார சபை, இரசாயன ஆயுதங்கள் கண்காணிப்பு மற்றும் செயற்பாட்டு தேசிய சபை,முயற்சியாண்மை முகாமைத்துவ தேசிய சபை, பாதுகாப்பு சேவை பாடசாலை ஆகியவை தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

 அனைத்து மாவட்டங்களும், பிரதேச செயலக பிரிவுகளும் உள்விவகார இராஜாங்க அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

காணி ஆணைக்குழு திணைக்களம், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு,அளவையியல் திணைக்களம்,காணி அளவீடு நிறுவன சபை,காணி பரிபாலனம்,கொள்கை திட்ட வகுத்தல் திணைக்களம்,காணி முரண்பாட்டு தீர்வு திணைக்களம் ஆகிய நிறுவனங்கள் காணி அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.