இலங்கை செய்திகள்
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்கள்
02/19/2021நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று வியாழக்கிழமை இரவு 10 மணி வரை 501 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 78 407ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 71 823 பேர் குணமடைந்துள்ளதோடு 5919 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு 617 பேர் தொற்று அறிகுறிகளுடன் சந்தேகத்தினடிப்படையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும் இலங்கையில் தற்போது தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் , மேல் மாகாணத்தில் மாத்திரமின்றி ஏனைய பல மாவட்டங்களிலும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படு;வதால் மக்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்று சுகாதார தரப்பு அறிவித்துள்ளது.