New year offer 2017

இலங்கை செய்திகள்

உயர் நீதிமன்றில் சிறப்பு மேன் முறையீடு - கொரோனாவால் உயிரிழந்ததாக கூறப்பட்ட இளைஞருக்கு மீள பி.சி.ஆர். பரிசோதனை செய்யக் கோரும் மனு

02/19/2021

மரணமடைந்த பின்னர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட இளைஞருக்கு, மீள பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கக் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவை விசாரணைக்கு ஏற்காது தள்ளுபடி செய்தமையை ஆட்சேபித்து இன்று (19.02.2021)  உயர் நீதிமன்றில் சிறப்பு மேன் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்படவுள்ளது.

சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயா ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட நீதிபதிகள் குழாம் , இது தொடர்பில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் தீர்ப்பறிவித்திருந்த நிலையில், மீள பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிடுமாறு இந்த சிறப்பு மேன் முறையீட்டில் கோரப்படவுள்ளதாக சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் உறுதி செய்தார்.