இலங்கை செய்திகள்
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசி
02/20/2021இதுவரை 3145 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
கொவிட் -19 வைரஸ் பரவலினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தற்போது அனைவருக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய கடந்த செவ்வாய்கிழமை முதல் இன்று வெள்ளிக்கிழமை வரையில் 3145 அதிகாரிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு சிறைச்சாலையில் 2345 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. பூஸா, மஹர,பல்லேசேன,பட்டரெக்க மற்றும் களுத்துறை ஆகிய சிறைச்சாலைகளின் அதிகாரிகளுக்கும் தடுப்பூசிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.