இலங்கை செய்திகள்
நாட்டுக்கு அர்ஜுன மகேந்திரனை அழைத்துவர தொடர் நடவடிக்கை
02/20/2021மத்திய வங்கி முறிகள் மோசடியுடன் தொடர்புடைய பிரதிவாதிகளான மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளராக பணியாற்றிய அஜான் புஞ்சிஹேவா ஆகியோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசின் சிரேஷ்ட சட்டவாதி வசந்த பெரேரா நிரந்தர மூவரடங்கிய விஷேட மேல் நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்தார்.
2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கியின் பிணை முறிகள் ஏலத்தின் மூலம் அரசாங்கத்திற்கு 688 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட 10 பிரதிவாதிகளுக்கு எதிராக 23 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் விஷேட தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.