இலங்கை செய்திகள்
5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை வழங்குவதாக இந்தியா உறுதி
02/22/2021இந்தியாவின் சீரம் நிறுவனத்திடமிருந்து இன்னும் 5 இலட்சம் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை, இந்தியாவிடம் குறித்த தடுப்பூசிகளை இலங்கை கோரியிருந்த நிலையிலேயே இவ்வாறு தடுப்பூசிகளை வழங்க இந்தியா இணங்கியுள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.