New year offer 2017

இலங்கை செய்திகள்

கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

02/23/2021

இலங்கையில் இன்று கொவிட் 19 தொற்றால் மேலும்  05 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.

அந்த வகையில் தூனகஹ பிரதேசத்தைச் சேர்ந்த  33 வயதுடைய பெண் ஒருவர், குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 

கொவிட் 19 தொற்றுடன் தீவிர நீரிழிவு மற்றும் தீவிர சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நுகேகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய பெண் ஒருவர், 2021 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு 12 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய ஆண் ஒருவர், பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். 

கொவிட் தொற்றுடன் குருதி நஞ்சானமை, சிறுநீர் வழியில் ஏற்பட்ட தீவிர தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மினுவாங்கொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய பெண் ஒருவர், கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்திசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். 

கொவிட் நியூமோனியா மற்றும் தீவிரமாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு 13 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய ஆண் ஒருவர், 2021 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் தீவிர நீரிழிவு மற்றும் உயர்  குருதியழுத்தம் போன்றன மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.