இலங்கை செய்திகள்
இன்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் கோப் குழு முன்னிலையில்
02/23/2021இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் இன்று அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பானது கடந்த வாரம் விடுக்கப்பட்டதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித ஹேரத் முன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டத்தில் மண்சரிவு ஆபத்து நிறைந்த வலயத்தில் வசிக்கும் மக்களை மீள்குடியமர்த்தும் திட்டத்தின் செயற்றிறன் தொடர்பில் நாளை கோப் குழு கலந்துரையாடவுள்ளது.
முழுமையான சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி கோப் குழுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.