New year offer 2017

இலங்கை செய்திகள்

கொழும்பைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 4 பேர் கொரோனாவால் உயிரிழப்பு

04/03/2021

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 4 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 575 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண்ணொருவரும், ஹோமாகமை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஆண்ணொருவரும் புவக்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 87 வயதுடைய ஆண்ணொருவரும் கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 90 வயதுடைய ஆண்ணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.