இலங்கை செய்திகள்
ரிசாத் பதியுதீன் - நுகர்வுப் பொருட்கள் இறக்குமதி மோசடிகளுக்கு அரசு கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம்
04/05/2021மக்களின் நாளாந்த நுகர்வுப் பொருட்களான சீனி மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதியில் இடம் பெற்றதாக நம்பப்படும் மோசடி,துஷ்பிரயோகம் தொடர்பில் அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
கிண்ணியாவில் நேற்று (04.04.2021) இடம் பெற்ற மக்கள் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சீனி மோசடியாளர்களை இனம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்விடயம் கோப்புக்கு வந்துள்ளது.
கொள்ளையடித்த பணத்தை மீள அரசுக்கு வழங்க வேண்டும். எண்ணெயில் புற்றுநோய் கலப்படம் இனிமேல் இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறக் கூடாது யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு மேலும் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் இலங்கையில் உள்ள மீனவர்கள் இன்று மீன் பிடித்துறையில் மிகவும் பின் அடைந்தவர்களாக குடும்ப வாழ்வாதாரத்தில் முகங்கொடுக்க முடியாது கஷ்டப்படுகின்ற போது வெளிநாட்டு மீனவர்கள் இலங்கையில் வந்து மீன்பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது என்பது புத்திசாலித்தனமல்ல அதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம்.
இந்த நாடு நமக்குச் சொந்தமானது எந்த இனமாக இருந்தாலும் மீன் பிடிக்கலாம்
எமது மீனவர்களுக்கே கடலில் மீன்பிடிப்பதற்கு பல தடைகளையும் தடங்களையும் இடர்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்ற மீன்பிடி அமைச்சு வெளிநாட்டவர்களுக்கு வழங்குவார்களாயின் அதற்கு எதிராக மீனவர் சமூகத்துடன் சேர்ந்து
ஜனநாயக ரீதியில் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இலங்கை மீனவர்கள் யுத்த சூழ் நிலையின் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் வட கிழக்கில் மீண்டும் இவ்வாறான மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கைவவைக்கக் கூடாது அவர்களது பொருளாதாரத்தினை உயர்த்த வேண்டும் என்றார்.