New year offer 2017

இலங்கை செய்திகள்

புத்தாண்டில் போக்குவரத்து கட்டுப்பாடு குறித்து இராணுவத்தளபதியின் கருத்து

04/07/2021

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,

எதிர்வரும் இரு வாரங்கள் மிக முக்கியத்துவமுடையது என்பதால் மக்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்களில் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கும் , இதன் போது தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆசியாவில் பல நாடுகளிலும் தற்போது கொவிட் பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. எனவே கொவிட் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்றுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எனினும் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய நிலைமை ஏற்படவில்லை. அது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை. போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படாவிட்டாலும் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.