New year offer 2017

இலங்கை செய்திகள்

ரஷ்யா - இலங்கைக்கான விமான சேவைகள் ஆறு வருடங்களின் பின்னர் ஆரம்பம்

08/01/2021

ஆறு வருட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த  இலங்கைக்கும், ரஷ்யாவிற்கும்  இடையிலான விமான சேவைகள் இன்று காலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கை விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான  விமானம்  ரஷ்யாவின் மொஸ்கவ் நகரில் இருந்து  கடுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கில் விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது என விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி  இராஜாங்க அமைச்சர் டி.வி சானக தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2015 ஆம் ஆண்டு முதல் இடை நிறுத்தப்பட்டிருந்த  ரஷ்யாவிற்கும், இலங்கைக்குமான விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிப் பெற்றுள்ளது.

சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.  வெளிநாட்டு சுற்றுலாபிரயாணிகள் நாட்டுக்கு வருகை தருவதற்கான செயற்திட்டங்கள் விமான சேவை நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறை சேவை கைத்தொழில் இன்னும் இரண்டு மாத காலத்திற்குள் வழமை நிலைக்கு திரும்பும் என்றார்.