New year offer 2017

இலங்கை செய்திகள்

சர்வதேச மன்னிப்புச்சபை - பயங்கரவாத சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களின்றி தடுப்பிலுள்ளவர்களை விடுவிக்க வேண்டும்

09/14/2021

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மீளாய்வு செய்வதுடன் அவர்களில் குற்றச்சாட்டுக்கள் எவையுமின்றித் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.
 
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை உடனடியாக மீளாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு சர்வதேசக் கட்டமைப்புக்களினாலும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் செய்யப்பட்டிருக்கும் பதிவிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றின் கதையும் இருநிமிட காணொளி வடிவில் பகிரப்பட்டுள்ளது.
 
பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் தமது அன்பிற்குரியவர்கள் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருப்பதன் காரணமாக, பல குடும்பங்கள் பெரும் துன்பத்திற்கு முகங்கொடுத்து வருகின்றனர். 


சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டவர்களை விசாரணைகளின்றித் தடுத்துவைப்பதற்காக அதிகாரத்தைப் பயங்கரவாதத்தடைச்சட்டம் வழங்குகின்றது என்றும் அப்பதிவில் சர்வதேச மன்னிப்புச்சபை சுட்டிக்காட்டியிருக்கின்றது.
 
'பெருமளவானோர், குறிப்பாக சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குற்றச்சாட்டுக்களோ அல்லது போதிய ஆதாரங்களோ இல்லாமல் வெகுகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 


மேலும் பலர் தமது வழக்கு விசாரணைகள் எப்போது ஆரம்பமாகும் என்று காத்திருக்கின்றார்கள்' என்றும் மன்னிப்புச்சபை விசனம் வெளியிட்டுள்ளது.