New year offer 2017

இலங்கை செய்திகள்

சன்ன ஜயசுமன - காணாமல் போயிருக்கும் கோப்புகள் சாதாரண தரவுகளாகும்

09/21/2021

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் மொத்தமாக  5 ஆயிரத்தி 925 கோப்புகளே காணாமல் போயிருக்கின்றன. அதில் 53 வீதமானவை சாதாரண ஒசுசல வியாபார நிலையங்களை பதிவு செய்தல், புதுப்பித்தல் தொடர்பான தரவுகளாகும்.

அதனால் மருந்து பொருட்களுக்கு எந்தவித தட்டுப்பாடும் ஏற்படாது என்பதை உறுதியாக தெரிவிக்கின்றேன் என ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ்  தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையில் தரவுகள் காணாமல் போயிருப்பது தொடர்பாக கேற்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.