New year offer 2017

இலங்கை செய்திகள்

சஜித் - தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் காணாமல் போயுள்ளமை தொடர்பில் உண்மையை வெளிப்படுத்தவேண்டும்

09/21/2021

தேசிய ஓளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்குரிய மிக முக்கியமான சுமார் 11 இலட்சம் தரவுக் கோவைகள் காணாமல் போனமை மற்றும் அதன் முழுப் பொறுப்பையும் ஒரு தனியார் நிறுவனத்தின் கணினி இயக்குநரின் கை தவறு எனத் தெரிவித்து அதனை நலினப்படுத்துவதன் மூலம் நாட்டு மக்களின் பாதுகாப்பு கடுமையான அவதானமிக்க நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பல்வேறு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதியை வழங்கியுள்ளமை, மருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி வழங்கியுள்ளமை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள இக்காலப்பகுதியில், இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக கருதி விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை  நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.