இலங்கை செய்திகள்
எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு!கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்த கப்பல்
11/26/2022சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 10.6 மில்லியன் லிட்டர் டீசலை ஏற்றிய SUPER EASTERN எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு கொண்டு வரப்பட்ட டீசல் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.
குறித்த டீசலை விவசாய மற்றும் மீனவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாய அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக டீசலை இலவசமாக விநியோகிக்கவுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.