Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-content/plugins/page-views-count/admin/admin-interface.php on line 356
எதிர்கட்சி தலைவராகிறார் ஸ்டாலின் | Goldstars News

எதிர்கட்சி தலைவராகிறார் ஸ்டாலின்

சாரிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்பட்டது.

தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு இன்று நடைபெற்றது. தொடர்ந்து நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் ஸ்டாலின் திமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் அவர் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறுகிறார்.
கட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னை அறிவாலயத்தில் நடந்த செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:

13 வது முறை வெற்றி பெற்ற கருணாநிதிக்கு பாராட்டு

* தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்ட கருணாநிதி, ஸ்டாலினுக்கு பாராட்டு

* திமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல்

* மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு தொடர்பாக மாநில அரசு வழக்கு தொடர வலியுறுத்தல்

* அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் ஆணையத்திற்கு கண்டனம்

* திருப்பூரில் கன்டெய்னர்களில் ரூ. 570 கோடி பதுக்கியது தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்

* கரூர் அன்புநாதன் வீட்டில் பணம் பதுக்கியது தொடர்பா சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும்.

* ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தல்

தொடர்ந்து நடந்த எம்எல்ஏ.,க்கள் கூட்டத்தில் தி.மு.க., சட்டசபை குழு தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராகிறார். சட்டசபை திமுக குழு துணை தலைவராக துரைமுருகன், கட்சி கொறடாவாக சக்கரபாணி, துணை கொறடா பிச்சாண்டி ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

Author: admin

Share This Post On

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-includes/class-wp-comment-query.php on line 405

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com