Warning: "continue" targeting switch is equivalent to "break". Did you mean to use "continue 2"? in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-content/plugins/page-views-count/admin/admin-interface.php on line 356
பத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம் | Goldstars News

பத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம்

சென்னை : தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூ்ர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உடப்ட 50 பேர் 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர். 224 பேர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல் முடிவடைந்தது. மொத்தம் 10.50 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 7,000 பேர் தமிழ் அல்லாத பிறமொழியை தாய்மொழியாக கொண்டு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று காலை, 9:31 மணிக்கு வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி 499 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதாலிடம் பிடித்துள்ளது. மாநிலத்தின் 3வது இடத்தையும் இப்பள்ளியே பெற்றுள்ளது. மாநில 2வது இடத்தை கரூ்ர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உடப்ட 50 பேர் 498 மதிப்பெண் பெற்றுள்ளனர். 3வது இடத்தை 224 பேர் பெற்றுள்ளனர்.

மாணவிகள் சாதனை:

10ம் வகுப்பு தேர்வில் 4,83,717 மாணவிகள் (95.9 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை பொறுத்த வரையில், 4,63,618 பேர் (91.3 சதவீதம்) தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவர்கள்:

மொழிப்பாடத்தில் 73 பேர் 100க்கு 100 எடுத்துள்ளனர். கணிதத்தில் 18,754 பேர் முழு மதிப்பெண்ணான 100 க்கு 100 எடுத்துள்ளனர். ஆங்கிலத்தில் 51 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அறிவியலில் 18,642 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 39,398 பேர் முழு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்

ஈரோடு முதலிடம்:

10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. 93.6 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நெல்லையில் 95.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்தூத்துக்குடியில் 96.93 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ராமநாதபுரத்தில் 97.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவகங்கையில் 96.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
விருதுநகரில் 97.81 மாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர்.
தேனியில் 96.57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மதுரையில் 95.68 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திண்டுக்கல்லில்92.57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஊட்டியில் 93.25 சதவீத மாணவர்கள்தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் 95.62 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கோவையில் 96.22 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஈரோட்டில் 98.48 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலத்தில் 94.21 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாமக்கல்லில் 96 சதவீதமாணவர்கள் தேர்ச்சி பெற்றள்ளனர்.
கிருஷ்ணகிரியில் 95.05 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தர்மபுரியில் 94.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுக்கோட்டையில் 94.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கரூரில் 96.67 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுளளனர்.
அரியலூரில் 92.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பெரம்பலூரில் 96.52 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
திருச்சியில் 95.92 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 89.43 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருவாரூரில் 89.33 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தஞ்சாவூரில் 89.33 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
புதுச்சேரியில் 92.42 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
விழுப்புரத்தில் 88.07 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
கடலூரில் 89.13 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருவண்ணாமலையில் 89.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
வேலூரில் 86.49 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
காஞ்சிபுரத்தில் 92.77 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
திருவள்ளூரில் 90.84 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
சென்னையில் 94.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
துபாயில் தேர்வு எழுதிய 31 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Author: admin

Share This Post On

Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /home/wwwsiv8/public_html/thangatheepam.com/tn2016/wp-includes/class-wp-comment-query.php on line 405

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *

Facebook Auto Publish Powered By : XYZScripts.com