வெயில் கொடுமைக்கு 317 பேர் பலி
ஐதராபாத்:தெலுங்கானா மாநிலத்தை புரட்டி எடுக்கும் கொடூரமான வெயிலில் சிக்கி, இதுவரை, 317 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாநிலங்களில், இந்த ஆண்டு கடுமையான கோடை நிலவி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில், முக்கிய நகரங்களில், 50 டிகிரி ‘செல்சியஸ்’ வெப்பம் நிலவி வருகிறது. இதுபோலவே, தென் மாநிலங்களில் ஒன்றான தெலுங்கானாவிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. ‘ரோனு’ புயல் கடந்து சென்ற பின், அங்கு, வெப்ப காற்று வீசி...
ஐ.எஸ்., பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள்
புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், ‘தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்’ என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள்...
பத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ராசிபுரம்; 50 பேர் 2வது இடம்
சென்னை : தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகின. இதில் விருதுநகர் மாவட்டம் சிவகுமார், மற்றும் ராசிபுரம் எஸ்.ஆர்.வி., எக்செல் பள்ளி மாணவி 499 மதிப்பெண்கள் பெற்று மாநில முதலிடமும், கரூ்ர் ஸ்டார் மெட்ரிக் பள்ளி மாணவி பிரதீபா உடப்ட 50 பேர் 498 மதிப்பெண் பெற்று 2வது இடமும் பெற்றுள்ளனர். 224 பேர் 3வது இடத்தைப் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ல் துவங்கி, ஏப்ரல் 13ல்...
கல்விக் கொள்கையில் மாற்றம்; மத்திய அரசு ஆலோசனை
பரூக்காபாத் : உ.பி., மாநிலம், பரூக்காபாதில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கட்டேரியா தெரிவித்ததாவது: நாடு முழுவதும் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் நடைமுறையிலுள்ள கல்விக் கொள்கையில், 8-ம் வகுப்பு வரையில் தேர்வுகளில் மாணவர்களை தோல்வியடையாமல் இருப்பது...