New year offer 2017

கனடா செய்திகள்

கடுமையான புயலை தொடர்ந்து கியுபெக்கை தாக்கிய சுறாவளி

08/31/2018

ஒன்ராறியோவின் கிழக்கு பகுதி மற்றும் கியுபெக்கில் புதன்கிழமை கடுமையான புயலை தொடரந்து சூறாவழி ஏற்ப்பட்டுள்ளது. EF-2 எனப்படும் இந்த சூறாவழி காரணமாக பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தானிய களஞ்சியங்கள் இரண்டு சிமித் வோல்ஸ் ஒன்ராறியோவில் சேதமடைந்துள்ளன. மாகாணத்தில் மோசமான வானிலையை தொடர்ந்து EF-2 சூறாவளி ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டாவா பார்ஹெவன் பகுதியில் 20,000ற்கும் மேற்பட்ட மக்கள் மின்சாரம் இழந்து தவித்தனர்.

179 முதல் 218கிலோ மீற்றர்கள் வேகத்தில் வீசிய காற்றுடன் EF-2 வகை சூறாவளி மரமடர்ந்த பகுதி ஊடாக முன்னேறியது. மரங்கள் பல வேருடன் சரிந்தன.

மொன்றியல் பகுதியில் 100,000 வாடிக்கையாளர்கள் மின்சாரத்தை இழந்தனர்.

மாகாணத்தின் மற்றய பிராந்தியங்களிலும் இதே போன்ற சேதங்கள் ஏற்பட்டுள்ளன.