New year offer 2017

கனடா செய்திகள்

இராணுவ சேவையில் இருந்த 75 சிறார்கள் விடுவிப்பு

09/01/2018

மியன்மார் இராணுவத்தின் சேவையில் இருந்த 75 சிறார்கள் இன்று விடுவிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

சர்வதேச எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும், இராணுவம் தொடர்ந்து சிறார்களை பலவந்தமாக இராணுவத்தில் இணைத்துக்கொள்ளவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2012 ஜூன் மாதம் முதல் இதுவரை 924 சிறார்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளுக்கான சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை போராளிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மியன்மார் அரசோ அல்லது இராணுவத் தரப்பினரோ எந்தவிதமான தகவலையும் இதுவரை வெளியிடவில்லை.

முழு அளவிலான இராணுவ ஆட்சி நிலவிய காலம் முதல் சிறார்களை படையில் சேர்ப்பது உட்பட பாரிய மனித உரிமை மீறல்களை மியன்மார் இராணுவம் மேற்கொண்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.