கனடா செய்திகள்
வடகொரியா விடயத்தில் டொனால்ட் ட்ரம்பின் திடீர் முடிவு
09/01/2018வடகொரியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை அமெரிக்க வெளிவிவகாரத்துறை அமைச்சர் மைக் பம்பியோ, மேற்கொள்ளவிருந்த வேளை, திடீர் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த பயணத்தை ரத்து செய்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் போது வட கொரியாவினால் வழங்கப்பட்ட அணு ஆயுதங்கள் குறித்த வாக்குறுதிக்கு அமைய செயல்பட தவறியதன் காரணமாகவே வெளிவிவகாரத்துறை அமைச்சரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர, தற்போதைய நிலையில், தென்கொரியாவுடன் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை எனவும் டொனால்ட் ட்ரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.