New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோ சுரங்க பாதை அமைப்பு ஒன்ராறியோ அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள்

09/01/2018

ரொறொன்ரோ-ஒன்ராறியோ அரசாங்கம் ரொறொன்ரோ சுரங்கபாதை அமைப்பை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்துடன் முன்நோக்கி நகர்வதாக அறியப்படுகின்றது.

இந்நடவடிக்கை குறித்து சிறந்த அணுகு முறையை நாடுவதற்கு சிறப்பு ஆலோசகர் ஒருவரை நியமித்துள்ளது.

மைக்கல் லின்செ மற்றும் மூன்று நிபுணர்கள் அடங்கிய ஆலோசனை குழு நியமிக்கப்பட்டுள்ளது.

ஒரு பிராந்திய போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதென முதல்வர் டக் வோட் இலையுதிர் கால தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.

ரொறொன்ரோ சுரங்க ரயில் சேவை அமைப்பை மாகாணத்துடன் பதிவேற்றம் செய்வது நகரத்திற்கு பயனளிக்குமென தெரிவித்திருந்தார்.

புரோகிறசிவ் கொன்சவேட்டிவ் தேர்தல் மேடையும் சுரங்க ரயில் சேவையை நகரம் இயக்க அனுமதிப்பதாக உறுதியளித்திருந்தனர்.

ரொறொன்ரோ போக்குவரத்து ஆணையத்தை கட்டுப்படுத்தும் எந்த உத்தேசமும் வலுவான ஆலோசனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி தெரிவித்தார்.

மாகாணம் இத்தகைய ஒரு திட்டத்தை ஒரு தலைப்பட்சமாக உருவாக்க முடியாதெனவும் தெரிவித்தார்.