கனடா செய்திகள்
நஃப்டா ஒப்பந்தத்தில் கனடா அவசியமில்லை டொனால்ட் டிரம்ப்
09/02/2018வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கனடாவை தொடர்ந்தும் உள்ளடக்க வேண்டிய அவசியமில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்
அதேவேளை, இந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளுக்கு அமெரிக்க காங்கிரஸ் மத்தியஸ்தம் வகிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் எச்சரித்துள்ளார்.
நஃப்டா சர்ச்சை நீடிக்கும் நிலையில், ட்ரம்ப் நேற்று இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்நிலையில், நஃப்டா முக்கோண வர்த்தக உடன்படிக்கையை அவர் முறித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
“நஃப்டா வர்த்தக உடன்படிக்கையில் கனடாவை உள்வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பல தசாப்தங்களுக்குப் பிறகு அமெரிக்காவிற்கு நாங்கள் நியாயமான உடன்பாடுகளை மேற்கொள்ளாவிட்டால் அது ஒரு நியாயமற்ற செயற்பாடாகவே அமையும்.
இந்த பேச்சுவாரத்தைகளின் போது அமெரிக்க காங்கிரஸ் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். நான் மிக லாவகமாக நஃப்டா உடன்படிக்கையை முடிவுக்கு கொண்டு வருவேன்.
இன்னும் சிறிது நாட்களில் சிறந்த பலனை எதிர்ப்பார்க்கலாம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.