New year offer 2017

கனடா செய்திகள்

தண்டவாளம் மாற்றியமைத்தல் காரணமாக மேற்கு எல்லை குறுக்கு சந்திப்பு மூடப் படுகின்றது

09/02/2018

ரொறொன்ரோ- ஒரு பாரிய மேற்கு-எல்லை குறுக்கு சந்திப்பு அடுத்த ஐந்து வாரங்களிற்கு ரிரிசி தண்டவாள மாற்றியமைத்தல் காரணமாக மூடப்படுகின்றது.

டன்டாஸ் வீதி மேற்கு மற்றும் லான்ட்ஸ்டவுன் அவெனியு அக்டோபர்5வரை தடுக்கப்படும்.ரொறொன்ரோ நகரம் மற்றும் ரிரிசி குறிப்பிட்ட பகுதியில் வீதிக்கார் தண்டவாளங்களை மாற்றியமைப்பதே காரணமாகும்.

அப்பகுதி போக்குவரத்தை சமாளிக்கவும் அனைத்து வீதி பாவனையாளர்கள், பாதசாரிகள், மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பான பயணங்களை உறுதிப்படுத்தும் வகையில் அடையாளங்கள் வைக்கப்படும் என கூறப்படுகின்றது.

505டன்டாஸ், 47லான்ஸ்டவுன் மற்றும் 402பார்க்டேல் பாதைகள் இந்த நடவடிக்கை காரணமாக பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.