New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோவில் Streetcar இல் கத்திக்குத்து

09/02/2018

ரொறொன்ரோவில் Streetcar இல் பயணித்த இளைஞர் ஒருவர் மீது சரமாரியான கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது குயின்ஸ் தெரு மேற்கு மற்றும் ஸ்பேடினா அவென்யூ பகுதியில் நேற்று மதியம் சம்பவித்துள்ளது.

இதன் போது 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பல தடவைகள் கத்திகுத்துக்கு இலக்காகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் குறித்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாக கூறிய பொலிஸார், சிசிடிவி காட்சிகள் மூலம் அவர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.