New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோவில் இருவருக்கு வலைவீசும் பொலிஸார்

09/03/2018

ரொறொன்ரோவில் Streetcar இல் பயணித்த இளைஞர் மீது சரமாரியான கத்திக்குத்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்களை தேடி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவமானது குயின்ஸ் தெரு மேற்கு மற்றும் ஸ்பேடினா அவென்யூ பகுதியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

இதில் பல தடவைகள் கத்திகுத்துக்கு இலக்காகிய நிலையில் படுகாயமடைந்த இளைஞர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேகநபர் குறித்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாக கூறிய பொலிஸார், சிசிடிவி காட்சிகள் மூலம் அவர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இருவரின் புகைப்படங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு அழைப்பினை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.