New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோவில் சுற்றுச்சூழல் தொடர்பில் முக்கிய எச்சரிக்கை

09/03/2018

ரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி இன்று மதியம் 12 மணியளவில் கனமழை பெய்யக்கூடும் என சுற்றுச்சூழல் கனடா அனுப்பியுள்ள ஒரு சிறப்பு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது இடி மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு சுற்றுச்சூழல் கனடா அறிவித்தல் விடுத்துள்ளது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் பெய்த கனமழை காரணமாக ரொறொன்ரோ முழுவதும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.