New year offer 2017

கனடா செய்திகள்

ரொறொன்ரோவில் 5 இளைஞர்கள் கைது

09/03/2018

ரொறொன்ரோ மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்ற பல கொள்ளச் சம்பவங்கள் தொடர்பில் 5 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் குறித்த பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் வில்லியம்ஸ் பார்க்வே மற்றும் சென்டர் ஸ்ட்ரீட் நோர்த் பகுதியில் நேற்று சந்தேகத்திற்கிடமான வாகனத்தை பொலிஸார் சுற்றிவளைத்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஹாமில்டன், ஹால்டன் மற்றும் பீல் பிராந்தியங்கள், முக்கியமாக எரிவாயு நிலையங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றை இலக்கு வைத்து 15 கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றது.

இதனை அடுத்து பொது மக்களுக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில், அவை தற்போது மீள பெறப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் அஞ்ச தேவையில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை மேலதிக விசாரணைக்கு உற்படுத்தி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.