கனடா செய்திகள்
இதய சத்திரசிகிச்சையின் போது மருத்துவர்கள் செய்த தவறு
09/04/201873 வயது நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட இருதய சத்திரசிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறுதலாக ஊசியொன்றை அந்நபரின் மார்பு பகுதியில் வைத்து தைத்ததால் அவர் கடும் வேதனையை அனுபவித்து மரணமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அமெரிக்காவின் தென்னசி மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
லபாயப் எனும் இடத்தை சேர்ந்த ஜோர்ன் பேர்ல்ஸ் ஜொன்சன் என்ற நபரே சத்திரசிகிச்சை நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட மேற்படி தவறால் கடும் வேதனையை அனுபவித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
நஸ்வில்லே விலுள்ள ரைஸ்ட்டா மருத்துவ மனையில் சத்திரசிகிச்சை பூர்த்தியடைந்து 9 மணித்தியாலங்களின் பின்னரே சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவரான ஸ்ரீ குமார் சுப்பிரமணியம் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட ஊசிகளில் ஒன்று காணாமல் போயுள்ளதை அவதானித்துள்ளார்.
இதனையடுத்து அவரும் அவரின் மருத்துவ குழுவினரும் ஜொன்சனின் இருதய பகுதியில் மீண்டும் மேலதிகமாக மூன்று நேர சத்திரசிகிச்சையை முன்னெடுத்து அவரின் மார்பில் வைத்து தைக்கப்பட்ட ஊசியினை மீட்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களுக்கு அந்த ஊசியை கண்டுபிடித்து அகற்றுவது சாத்தியமாகவில்லை.
இந்நிலையில் முயற்சியை கைவிட்டு அவரது மார்பு பகுதியை மீண்டும் தைத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து 30 நாட்கள் சொல்லெண்ணா வேதனையையும் துன்பத்தினையும் அனுபவித்த ஜொன்சன் இறுதியில் மரணமானார்.
இதனையடுத்து ஜொன்சனின் குடும்பத்தினர் குறித்த மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஜொன்சனின் மார்பில் வைத்து தைக்கப்பட்ட ஊசியை அவரது பிரேத பரிசோதனையின் போதே கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.