New year offer 2017

கனடா செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த ஜெபி புயல்: 6 பேர் பலி 150க்கு மேற்பட்டோர் படுகாயம்

09/05/2018

ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள இஷிகாவா பகுதியில் இன்று கடந்த 25 வருடங்களில் இல்லாத அளவுக்கு வேகமான ஜெபி என்னும் புயல் வீசியதனால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சக்தி வாய்ந்த புயல் மணிக்கு 216 கிலோமீட்டர் வேகத்தில் வீசியமையினால் வீடுகளின் கூரைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது

மேலும் பல பகுதிகளில் பலத்த மழையும் பெய்து வருவதனால் பாடசாலைகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதனால் சுமார் 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளதுடன் ஆபத்தான பகுதிகளில் வசிக்கும் சுமார் 12 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.