கனடா செய்திகள்
கனடாவில் பெற்றோர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அறிக்கை
09/06/2018கனடாவில் குழந்தைகள் தற்கொலை, துஷ்பிரயோகம், இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில் ,
நேற்று குழந்தைகள் தற்கொலை பற்றிய உயர்ந்த விகிதங்களைக் காட்டும் புள்ளிவிபரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
மேலும் இந்த அறிக்கையை children first canada மற்றும் ஓ ‘பிரையன் பொது சுகாதாரம் குறித்த நிறுவனம், குழந்தை நலன், உடல் பருமன், வறுமை விகிதம் என்பவற்றினை அடிப்படையாக கொண்டுடே தயாரித்திருந்தது.
குறிப்பாக மனநல பாதிப்பு ஒன்ராறியோவிலேயே அதிகம் ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக ஒன்ராறியோவில் 2016 ஆம் ஆண்டில் 16,291 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து 2 ஆவது இடத்தில் கியூபெக் நகரமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.