கனடா செய்திகள்
நீர்கொழும்பில் சீன பிரஜை கைது
09/12/2018நீர்கொழும்பு - கிம்புலபிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் வளங்களை தம் வைத்திருந்த சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து கடல் அட்டைகள் 6 கிலோகிராம் மற்றும் 33 கிலோகிராம் கடல் குதிரைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.